உலகில் நடைபெறும் பயனுள்ள அன்றாட சுவையான நிகழ்வுகளையும் அதனைச்சார்ந்த மேலான எண்ணங்களையும் அலசி ஆராய்வதே நோக்கம்.

திங்கள், 15 ஜூன், 2020

வயிற்று வலியை இந்த மருந்து விரைவில் குணமாக்கும்

வயிற்று வலியை இந்த மருந்து விரைவில் குணமாக்கும் 


நம் உடலில் உள்ள பல உறுப்புகளில் முக்கியமானது வயிறு பகுதியாகும். நாம் உண்ணும் உணவு வயிற்றினுள் சென்று பலவித மாறுபாடுகள் அடைந்து கடைசியாக ஜீரணம் ஆகிறது.  

எனவே வயிறு நம் உடலின் முக்கிய பகுதியாக இருப்பதால் அதில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வயிறு பலவித உபாதைகளை ஏற்படுத்துவது இயற்கையே. அவ்வாறு வயிற்றில் ஏற்படும் சிற்சில சாதாரண உபாதைகளை நாம் வீட்டு வைத்தியம் மூலம் சரிசெய்ய முடியும். 
அவ்வாறு ஏற்படும் வயிற்று உபாதைகளில் பரவலாக சொல்லப்படுவது 'வயிற்று வலி' ஆகும். 


இந்த வயிற்று வலி ஏற்பட பலவித காரணங்களைச் சொல்லலாம். அஜீரணம், வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாதல், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டி போன்றவைகளால் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

இந்த வயிற்று வலி யாருக்கெல்லாம் ஏற்படும் என்று பார்த்தால் அதிகமாக குழந்தைகளுக்கும் பெரிய வர்களுக்கு ஏற்படுவது சாதாரணம். ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சனையை ஆராய்ந்தால் பல காரணங்கள் தெரிய வரும். 

இந்த வயிற்று வலியானது சிலருக்கு சிறிது நேரம் இருக்கும் பிறகு சரியாகிவிடும். சிலருக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டு மிகுதியாக அவதிப்படுவார்கள். சாதாரண அஜீரணம் அல்லது புளி ஏப்ப வழியாக இருந்ததால் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்த முடியும். 

வீட்டு வைத்தியம்: ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை நன்றாக பொறித்து இடித்து தூள் செய்து ஒரு குவளை மோரில் கலந்து குடித்துவர வயிற்று வலி விரைவில் குணமாகும். இது ஒரு கைகண்ட வைத்திய முறையாகும். செய்து பயனடையுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக