![]() |
| courtesy:pixabay.com |
2020 ஆண்டு சந்திர நிகழ்வுகள் - ஒரு செய்தி விளக்கம் உங்களுக்காக
2020 ஆம்
ஆண்டு ஏப்ரல் 8 அன்று நிகழ்ந்த பௌர்ணமி
அதாவது முழு நிலவு இந்த
ஆண்டின் மிகப்பெரிய சந்திர தரிசனமாக விளங்கியது. இந்த
சூப்பர் மூன் பூமிக்கு மிக
அருகில் வருவதால் ஏற்பட்டது. சந்திரன்
சாதாரணமாக பூமியிலிருந்து சுமார் 384,400 கி. மீ. தூரத்தில்
சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும். ஏப்ரல் மாதத்தில் சந்திரன்
பூமியிலிருந்து சுமார் 357,035 கி. மீ தூரத்தில்
சந்திரன் வருவதால் மிகவும் பெரியதாகவும் அதிகப்பிரகாசமாகவும்
காட்சி அளிக்கும்
என விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த சூப்பர் மூன் சாதாரண
பௌர்ணமியை விட சுமார் 14 சத
விகிதம் பெரியதாகவும் சுமார் 30 சதா விகிதம் பிரகாசமாகவும்
இருக்கும் என்று சொல்லப்பட்டது.
இவ்வருடம்
2020 ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற்ற
சூப்பர் பிங்க் மூனை பலரும்
பார்த்து அதிசயித்திருப்பீர்கள். ஆனாலும் சிலர் இதனைப்
பார்க்க முடியாமல் போனவர்களும் இருக்கிறார்கள். மேக
மூட்டம் அல்லது பிற காரணங்களுக்காக
இந்த பிங்க் சூப்பர் மூனைப்
பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.
சந்திரன்
பூமிக்கு மிக அருகில் வருவதால்
அதன் அளவு வழக்கத்தைவிட பெரியதாகவும்
அதிகப் பிரகாசமாகவும்
தெரியவரும். இந்த நிகழ்வு
ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றதால் அமெரிக்க கலாச்சாரத்தின் படி இந்த முழு
நிலவை பிங்க் மூன் என்று
அழைக்கின்றனர்.
இந்த ஆண்டு மற்றும் ஒரு
சூப்பர் மூன் நிகழ்வு ஏற்பட
வாய்ப்பு இல்லை. ஆனாலும் இவ்வாண்டு
சில முக்கிய சந்திர நிகழ்வுகள்
நிகழ வாய்ப்புள்ளது என விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர்.
மைக்ரோமூன், ப்ளூ
மூன் மற்றும் பிளாக் மூன்
தவிர சந்திர கிரகணங்கள் ஆகிய நிகழ்வுகள் ஏற்படும் என கூறியுள்ளனர். அவைகளைப்பற்றி
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மைக்ரோமூன்
மைக்ரோமூன்
என்பது ஒரு முழு நிலவு
சிறிய மூன். சந்திரன் பூமியிலிருந்து
வெகு தொலைவில் போய்விடும் பொழுது மைக்ரோ மூன்
ஆகிவிடுகிறது. இது வழக்கமான அளைவைவிட
மிகவும் சிறியதாக இருக்கும். மேலும்
மைக்ரோமூன் வழக்கத்தைவிட குறைந்த பிரகாசமாக இருக்கும்.
இந்தியாவில் இவ்வருடம் அக்டோபர் மாதம் 2 மற்றும் 31 ஆகிய
நாட்களில் நிகழக்கூடிய பௌர்ணமி அன்று நாம்
காணலாம்.
இவ்வருடம்
மார்ச் 24 அன்று இவ்வாண்டின் முதல்
மைக்ரோ மூன் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அன்று நமக்கு அமாவாசை
ஆகையால் அது நமக்குத் தெரியவில்லை.
ப்ளூ மூன் மற்றும் பிளாக் மூன்
ஒரு பருவத்தில் ஏற்படக்கூடிய நான்கு அமாவாசைகளுக்குள் மூன்றாவதாக
ஏற்படக்கூடிய அமாவாசை பிளாக் மூன்
என்று அழைக்கப்படுகிறது. இவ்வருடம் ஆகஸ்டு 19 தேதி ஏற்படக்கூடிய அமாவாசையை
பிளாக் மூன் என்று சொல்லலாம்.
சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு
பௌர்ணமிகள் வர வாய்ப்புண்டு. அவ்வாறு
ஏற்படும் பௌர்ணமிகளில் இரண்டாவதாக ஏற்படும் பௌர்ணமியை ப்ளூ மூன் என்று
சொல்வார்கள். இவ்வருடம் அக்டொபேர் மாதத்தில் 31 தேதி நடைபெற உள்ளது. குரு பூர்ணிமா பற்றி தெரியுமா?
இவ்வருடம்
2020 மொத்தம் நான்கு சந்திர கிரகணங்கள்
நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். முதலாவது சந்திர
கிரகணம் ஏற்கனவே ஜனவரி மாதத்தில்
நடைபெற்று முடிந்துள்ளது. நடக்க
இருக்கும் கிரகணங்கள் அனைத்தும் பெனும்பரல் முறைப்படி நடக்க இருப்பவை.
2020 ஆண்டு
ஜூன் ஜூலை மற்றும் நவம்பர்
மாதங்களில் நடைபெற உள்ளன. நடைபெற
இருக்கும் மூன்று கிரகணங்களில் ஜூன்
5 அன்று நடக்க இருக்கும் சந்திரா
கிரகனைத்தை மட்டுமே பார்க்க முடியும். மற்ற கிரகணங்களைப்பற்றின விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என
அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த பதிவைப்பற்றின உங்களது மேலான கருத்துக்களை
தயவு செய்து தெரிவிக்கவும். மீண்டும்
சிந்திப்போம் நன்றி வணக்கம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக