உலகில் நடைபெறும் பயனுள்ள அன்றாட சுவையான நிகழ்வுகளையும் அதனைச்சார்ந்த மேலான எண்ணங்களையும் அலசி ஆராய்வதே நோக்கம்.

திங்கள், 29 ஜூலை, 2019

பல் வலியா! உடனே குறைக்க எளிய வீட்டு வைத்தியம்!

பல் வலியா! உடனே குறைக்க  எளிய வீட்டு வைத்தியம்! 



பல் வலி பிரச்சனை 

பல்வலி மிகப்பெரிய பிரச்சனை. பல் வலியை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். பலர் இந்த பல் வலியை அனுபவித்திருப்பார்கள். பல் வலி வந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் கணக்கில் அடங்கா. பல் வலி வந்து விட்டால் சரியாக சாப்பிட முடியாது,  சரியாக தூங்க முடியாது வலியை பொறுத்துக் கொள்வது மிகவும் கடினம். பல்வலியால் வாழ்க்கையே போய்விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக பலர் கூறுகின்றனர்.

மற்ற  விளைவுகள்:

பல்வலியால் தலைவலி, சுரம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்ப்பார்கள். அலுவலகத்தில் வேலை செய்வோர் சரிவர பணிகளை செய்ய முடியாது சோர்வுற்று அவதிப்படுவர். வீட்டில் உள்ள பெண்களும் பல் வலி வந்து விட்டால்  வீட்டு வேலைகளை கவனிக்க முடியாமல் சோகமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பக்க விளைவுகள்:

பல் வலியை உடனடியாக குறைக்காமல் விட்டாலோ அல்லது தடுக்க உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாது விட்டாலோ பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக நுரையீரல், இதயம், எலும்பு மண்டலம், மற்ற உறுப்புகளும் பாதிப்பிற்கு உட்படுத்தப்படும். எனவே பல் வலியை கட்டுப் படுத்துவது உடனடி அவசியமாகும். அதற்கு ஏற்ற எளிமையான வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது. இதை செய்து பாருங்கள் பல்வலி குறையும்!
தொடர்ந்து பயன்படுத்துவதால் பல் வலியை முற்றிலுமாக குணமாக்கலாம்.

 பல் வலிக்கு வீட்டு வைத்தியம்:  எளிய பல்பொடி மருந்து! 

பல் பொடி (மருந்து) தயாரித்தல்:

புளியங்கொட்டை மீதுள்ள தோலை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு அதனை நன்றாக பொடி செய்து கொள்ளவும். நன்றாக உலர்ந்த கருவேலம்பட்டை பொடியையும் தயார் செய்து கொள்ளவும். இரண்டையும் சம அளவில் கலக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்து இந்த மருத்துவ பல் பொடியை தயார் செய்து கொள்ளவும்.

எப்படி பயன்படுத்துவது?

இந்தப் பொடியைக் கொண்டு பல் துலக்கி வந்தால் இரண்டொரு நாட்களில் பல்வலி குறையும். தொடர்ந்து பயன்படுத்துவதால் முற்றிலுமாக பல் வலியை கட்டுப் படுத்தலாம். இது ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்.

செய்து பயனடையுங்கள்.

எளிமை மற்றும் சிக்கனம்:

இந்த வீட்டு வைத்தியம் மிகவும் எளிமையானது, சிக்கனமானது. விரைவில் குணமளிக்கக்கூடியது. வேறு எந்த தீங்கும் விளைவிக்காதது. அனைவரும் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். கூடுதலாக புதினா பயன்படுத்தி பல் வலியப் போக்குவதும் சிறந்த சிகிச்சை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக