உலகில் நடைபெறும் பயனுள்ள அன்றாட சுவையான நிகழ்வுகளையும் அதனைச்சார்ந்த மேலான எண்ணங்களையும் அலசி ஆராய்வதே நோக்கம்.

ஞாயிறு, 23 ஜூன், 2019

தலை பாரத்தைக் குறைக்க எளிய வீட்டு வைத்தியம்

தலை பாரத்தைக் குறைக்க எளிய வீட்டு வைத்தியம்

                                                               credit:tamilwealth.com
தலை பாரம்

தலை பாரம் சாதாரணமாக நாம் கேள்விப்படும் உபாதை. ‘தலை பாரமாக இருக்கு,  என்னால் எழுந்து வேலை செய்ய முடியவில்லை’ என்று பலர் புலம்புவதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். இது எதனால் இந்த உடல் உபாதை ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். ‘தலையில் நீர் கோர்த்திருக்கிறது’ என்று சாதாரணமாக சொல்வார்கள். அவ்வாறு தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் தலை பாரமாக இருக்க வாய்ப்பு அதிகம். இது இத்துடன் நின்று விடாமல், தலைவலி மற்றும் ஜுரத்தில் போய்விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த உபாதையிலிருந்து எளிதாக விடுபட சிறந்த வீட்டு வைத்தியம் ஒன்றைத்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

உபாதை -3 வைத்தியம் - 3

தலை பாரத்தைக் குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்தியம் இதோ!

நாம் அன்றாடம் நம் சமையலுக்குப்  பயன்படுத்தும் கொத்தமல்லி பற்றி எல்லோருக்கும் தெரியும். கொத்தமல்லி தழையை குழம்பு, ரசம் மற்றும் துகையால் ஆகியவற்றில் மணத்திற்காக நாம் பயன் படுத்திடுகிறோம். அப்படிப்பட்ட கொத்தமல்லியிலிருந்து சாறு எடுத்து அதை முன் நெற்றியில் பற்றாகப் போட்டால் தலை பாரம் குறையும். இந்த எளிய வீட்டு வைத்திய முறையை செய்துபார்த்து பலனடையவும். 

உடல் வெப்பத்தைக் குறக்க வீட்டு வைத்தியம் - இங்கு தெரிந்துகொள்ளலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக