credit: flickr.com |
நரம்பில் ஏற்படும் வலி
நம் உடல் எலும்பு, தசை மற்றும் நரம்புகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு என்பது நமக்குத் தெரியும். நாம் அன்றாடம் உடலை இயக்கி வேலை செய்கிறோம். நடப்பது, ஓடுவது நம் உடல் உறுப்புகளை அசைப்பது என பல விதமாக நம் நரம்புகளை அசைத்து செய்து வருகிறோம். பல சமயங்களில் நாம் நமது உடலை அதிக அளவு அசைத்து வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். அவ்வாறு அளவுக்கு அதிகமாக உடலை அசைத்து வேலை செய்யும்பொழுது நம் உடல் நரம்புகளில் வலி ஏற்படுகிறது. இதனால் சில உடல் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. உடல் சோர்வு, மயக்கம், நரம்புத்தளர்ச்சி போன்ற உபாதைகள் ஏற்படுவதை பார்க்கிறோம், உணர்கிறோம். மேற்கொண்டு நாம் அன்றாட பணியில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் நரம்பு வலியை எவ்வாறு நீக்குவது அல்லது குறைப்பது என்பதைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
credit: siddham.in |
உபாதை -2 வைத்தியம் -2
நரம்பில் ஏற்படும் வலியைக் குறைக்க வீட்டு வைத்தியத்தில் சில வழிகள் உள்ளன. நாம் அன்றாடம் குளிர்ச்சியான நீரிலோ அல்லது சூடான நீரிலோ குளிக்கிறோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக குளிக்கின்றனர். எட்டி மரத்தின் இலைகளை பறித்து வந்து வெந்நீரில் சில நிமிடங்கள் போட்டு வைத்து பின் அந்த வெந்நீரில் குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் நரம்பு வலியைக் குறைக்கலாம். 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு குளித்து வந்தால் குணம் தெரியும். இது ஒரு எளிய வீட்டிலேயே செய்யக்கூடிய வைத்திய முறை ஆகும். எட்டி மாற இலைக்கு அப்படிப்பட்ட மருத்துவ குணம் உள்ளதாக முன்னோர்களும் வைத்தியர்களும் அறிந்து வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்வோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக