உலகில் நடைபெறும் பயனுள்ள அன்றாட சுவையான நிகழ்வுகளையும் அதனைச்சார்ந்த மேலான எண்ணங்களையும் அலசி ஆராய்வதே நோக்கம்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

நீர்கடுப்பு தொல்லையிலிருந்து விடுபட எளிய வீட்டுவைத்திய முறை



நீர்கடுப்பு
நீர்கடுப்பு தொல்லையால் சிலர் அவதிப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். சிறு நீர் கழிக்கும்பொழுது அதிகமான எரிச்சல் ஏற்படுவதை அவர்கள் கூறுவார்கள். அதுமட்டுமின்றி சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறும். சிலருக்கு அடி  வயிற்றில் வலி கூட ஏற்படலாம். மிகுந்த வேதனையுடன் சோர்ந்து காணப்படுவார்கள். இந்த நீர்கடுப்பை சுலபமாக வீட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்தலாம்.



எளிய வீட்டு வைத்தியம்

கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் தயிர் சிறிது தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை மாலை இரண்டுவேளை தொடர்ந்து சாப்பிட்டு வர  நீர்கடுப்பு தொல்லையிலிருந்து விடுபடலாம். இது ஒரு எளிய வீட்டு வைத்திய முறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக