உலகில் நடைபெறும் பயனுள்ள அன்றாட சுவையான நிகழ்வுகளையும் அதனைச்சார்ந்த மேலான எண்ணங்களையும் அலசி ஆராய்வதே நோக்கம்.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

நான்கு ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் படம் ‘கன்னித்தீவு’



நான்கு ஹீரோயின்கள்
நாம் சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் நடித்த படங்களைத்தான் பார்த்திருக்கிறோம் அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம். மூன்று ஹீரோயின்கள் நடித்த படங்கள் கூட இருந்திருக்கலாம். ஆனால் நான்கு ஹீரோயின்கள் நடித்து ஒரு படம் வெளிவரயிருக்கிறது.


கன்னித்தீவு
நான்கு ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர்  ‘கன்னித்தீவு’.
சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் தொடக்க பூஜை  நடைபெற்றிருக்கிறது. இப்படத்தை கிருத்திகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. ஒளிப்பதிவை சிட்டிபாபுவும் ,இசையை அரோல்  கரோலியும் கவனிக்கிறார்கள்.

நான்கு ஹீரோயின்கள்
வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா  தத்தா, சுபிக்ஷா ஆகிய நான்கு ஹீரோயின்களும் நடிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக