உலகில் நடைபெறும் பயனுள்ள அன்றாட சுவையான நிகழ்வுகளையும் அதனைச்சார்ந்த மேலான எண்ணங்களையும் அலசி ஆராய்வதே நோக்கம்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

அதிக உடல் வெப்பத்தைக்குறைக்க எளிமையான வீட்டு வைத்தியம்


credit: dinamalar.com
credit:dinamalar.com

வீட்டு வைத்தியம்
பல தடவை ஆரம்ப உடல் உபாதைகளுக்கு வீட்டிலேயே செய்யப்படும் மருத்துவம்
மிகுந்த பலனை அளிக்கக்கூடியது..பக்க விளைவு  ஏற்படுத்தாது. சிக்கனமானது.
அன்றாட பணிகளுக்கு இடையூறு செய்யாதது. கைகண்ட பலனைத்தரவல்ல
இந்த வீட்டு வைத்தியத்தைப்பற்றி விரிவாக்கப் பார்ப்போம்.

எந்த நோய்க்கு அல்லது உபாதைக்கு  எந்த மருந்து என்பதனை நம் முன்னோர்கள்
கண்டறிந்து எழுதி வைத்துள்ளனர். நம் முன்னோர்கள் கையாண்ட அப்படிப்பட்ட
வீட்டு வைத்தியத்தைத்தான் நாம் விரிவாக பார்க்கப்போகிறோம். வாருங்கள் மேலே
தொடர்ந்து தெரிந்துகொள்வோம். இதில் ஹெர்பல் தாவரங்கள் முக்கிய பங்கி வகிக்கிட்றன.

உபாதை 1. உடல் எப்பொழுதும் வெப்பமாக இருத்தல்:
உடல் எப்பொழுதும் உஷ்ணத்துடன் இருக்கிறது, சோர்வாக இருக்கிறது என பலர்
சொல்வதைக் கேள்விப்பற்றிருப்பீர்கள். உடல் வெப்பமாக இருப்பதால் பலவித
தொந்திரவுகள் உண்டாகும். கண் எரிச்சல், உடல் சோர்வு, தூக்கமின்மை, எரிச்சலுடன்
சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.   சரி, இந்த உடல் வெப்பத்தை எவ்வாறு தவிர்ப்பது அல்லது குறைப்பது என்பதனைப்
பாப்போம்.

இதற்கான வீட்டு வைத்தியம் இதோ!

சாதாரணமாக நம் உணவில் பழங்களை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என
மருத்துவர்களும் பெரியோர்களும் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக கமலா ஆரஞ்சு
தினமும் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையச்செய்யும்.
எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு கமலா ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு
வாருங்கள். கூடிய விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும். இது ஒரு எளிய வீட்டு
வைத்தியம் தானே!      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக