கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டார்கள் மாநாட்டின் மூலம் 2.42 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைவிட அதிகமாக அளவில் முதலீட்டை ஈர்ப்பதே இம்மாநாட்டின் நோக்கமாக உள்ளது என அறிவித்துள்ளது தமிழக அரசு. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று ஜனவரி 23, 2019 இரண்டாவது உலக முதலீட்டார்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கிவைத்தார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டார். பல நாடுகளின் தூதர்கள் மற்றும் தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் மூலம் பெருமளவு முதலீட்டை ஈர்க்க வைப்பதே நோக்கம் என தமிழக அரசு கூறுகிறது.
37,000 தொழிற்சாலைகளுடன் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக தொழிலதிபர் வேணு ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அவர் மேலும் கூறினார். ஆட்டோமொபைல், ஐடி, உற்பத்தித்துறை, காற்றாலை மின்சாரம் என பல் துறை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறினார்.
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தின் வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனைப்ப பெற்றுக்கொண்டார்.
இம்மாநாடு நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனே ஷாப்பிங் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக