உள்ளத்தில் உறுதி வேண்டும் – வெற்றிக்கான ரகசியம்
முன்னுரை
“வாழ்க்கை வாழ்வதற்கே“ என்ற அடிப்படையை சென்ற பதிவில் விரிவாகப் பார்த்தோம். இதற்கான ஏழு அம்சங்களை விரிவாகப் பார்த்த நாம் இந்த பதிவில் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக நடத்தி செல்வது என்பதற்கு ஆதாரனமான உள்ளத்தில் உறுதி வேண்டும் என்ற கோட்பாட்டை தொடர்ந்து ஆராய்வோம். வாழ்க்கையில் வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வருபவை. வெற்றி கிடைத்தால் மகிழ்கிறோம், அதே சமயம் தோல்வி ஏற்பட்டால் மனம் நொந்து வருத்தப்ப டுகிறோம். சிலர் இருக்கிறார்கள் தோல்வி ஏற்பட்டாலும் மனதில் உறுதியுடன் இருந்து தடைகளை மீறி வெற்றி பெறுகிறார்கள். அதற்குத் தேவை மன உறுதி. எனவே உள்ளத்தில் உறுதிமட்டும் இருந்தால் நம்மால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. இந்த மன உறுதியைப் பற்றிதான் நாம் இங்கு விரிவாக பார்க்க இருக்கிறோம்.
உறுதியின் வலிமை
நாம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற திடமான நம்பிக்கை இருந்தால் நாம் துவண்டுவிட மாட்டோம். திடமான நம்பிக்கை மனஉறுதிக்கு வலிமை சேர்த்து நாம் எடுத்துக்கொண்ட முயற்சியில் அயராது உழைத்து வெற்றி பெறுவோம். உதாரணமாக ரைட் சகோதரர்களை எடுத்துகொள்வோம். அவர்கள் மனதில் உறுதியுடன் இருந்ததால்தான் எரோபிளேனை கண்டுபிடிக்க முடிந்தது. பலமுறை அவர்கள் தங்களின் முயற்சிகளில் தோல்வியுற்றாலும் மன உறுதியுடன் இருந்ததால்தான் அவர்கள் வெற்றி பெற முடிந்தது.
தடைகள் வெற்றிப் படிகளே
சிலர் ஆரம்பகாலத்தில் தங்கள் முயற்சிகளில் ஒரு சிறு தடங்கள் வந்தாலும் தங்கள் செயல்களை நிறுத்திக் கொள் வார்கள். மேற்கொண்டு முயல மாட்டார்கள். தடைகள் வந்தாலும் யார் ஒரு
வர் தொடர்ந்து முயற்சி செய்து செயலாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். தடைகளை படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறினால் மட்டுமே ஒருவர் வெற்றி பெறமுடியும். விடுதலைக்காக பாடிய நம் மகாகவி பாரதியாரும் உள்ளத்தில் உறுதிவேண்டும் என்றே பாடி மக்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.
உறுதியே வெற்றிக்கு அடிக்கல்
எண்ணால் முடியாது என்று எண்ணுபவன் எண்ணால் முடியும் என்று உறுதியாக உள்ளத்தை வைத்துகொண்டால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற முடியும். நாம் முன்னரே பார்த்ததுபோல் வெற்றிக்கான அடித்தளம் மன உறுதியே. டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாகவும் இந்திய குடியரசுத் தலைவராகவும் உயர்ந்ததற்கு காரணம் அவரது வெற்றியின் அடிகல்லான மன உறுதியே.
சோதனைகளை வெற்றிகொள்ளுதல்
வாழ்க்கையில் பல சோதனைகள் வரலாம், கஷ்டங்கள் ஏற்படலாம், அவற்றையெல்லாம் முறியடித்து தளரா முயற்சி செய்தால் மட்டுமே ஒருவரால் வாழ்க்கையில் வெற்றியை எட்டிப் பிடிக்க முடியும். நம் தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் வாழ்க்கையில் பல சோதனைகளை எட்ஜிர்கொன்டாலும் இறுதியில் தன் மன உறுதியால் வெற்றிகண்டார்.
உறுதியின் கண்ணோட்டம்
இப்பொழுது சொல்லுங்கள், மன உறுதி என்பது என்ன? அது வெறும் அசட்டு செயல் அல்ல. அது திட்டமிட்ட தெளிவான நோக்கமும் பாதையும் செயலும் தான். எனவே மன உறுதி என்பது உறுதியான இலக்கு, மற்றும் அத்துடன் இணைந்த சரியான தொடர் முயற்சியே.
மன உறுதிக்கு வழி
- தெளிவான குறிக்கோள்
- தோல்வியிலிருந்து பாடம் கற்றுகொள்ளுதல்
- உற்சாகத்துடன் விடாமுயற்சி
- சோம்பலின்றி உழைத்தல்
- நல்ல எண்ணங்கள்
முடிவுரை
இவைகள் அனைத்துமே மன உறுதிக்கு அத்தியா வசியமான நிலைபாடுகள். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. அது எப்பொழுதும் விழித்துக்கொண்டு இருந்து செயலாற்றிகொண்டிருக்கும். உள்ள உறுதி வாழ்க்கையின் வெற்றி.
முடிவுரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக