உலகில் நடைபெறும் பயனுள்ள அன்றாட சுவையான நிகழ்வுகளையும் அதனைச்சார்ந்த மேலான எண்ணங்களையும் அலசி ஆராய்வதே நோக்கம்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

எண்ணங்களின் ஏழு நிலைகள்

எண்ணங்களின் ஏழு நிலைகள்

எண்ணங்கள் 


முன்னுரை

நாம் எப்படி இருக்கிறோம் என்பது நம் எண்ணத்தைப் பொறுத்தது. எண்ணங்களே நம்மை ஆளுகின்றன. நம் என்ன அலைகள் நம்மிடத்திலிருந்து உற்பத்தி ஆவதால் நாம் என்ன அலைகளுக்கு ஏற்ப ஆகிறோம். நம் எண்ணங்கள் நமக்கு பலவாறாக உண்டாகலாம். எண்ணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கலாம். நல்ல எண்ணங்கள் நல்லவர்களையும் கெட்ட எண்ணங்கள் கெட்டவர்களையும் உண்டாக்குகின்றன. எண்ணங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை என இருவகை எண்ணங்கள் உள்ளன. நேர்மறை எண்ணங்கள் ஆக்கபூர்வமான மனிதர்களையும் எதிர்மறை எண்ணங்கள் அழிவுபூர்வமான மனிதர்களையும் உண்டாக்குகின்றன. இந்த எண்ணங்களின் தன்மையைப்பற்றி நாம் இங்கு விரிவாக ப் பாப்போம்.

எண்ணங்கள் 

மனிதனின் மிகப்பெரிய சக்தி எண்ணம். எண்ணங்கள் இல்லையேல் மனித வாழ்க்கை இல்லை. எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் படைத்தது. மனிதனின் அன்றாட நடைமுறைகளுக்கு அவனுடைய எண்ணங்களே காரணம். எண்ணங்கள் எப்படியோ அப்படியே மனிதனும் ஆகிறான். எண்ணம் ஒரு மனிதனுடைய வெற்றி தோல்வி, இன்ப துன்பங்கள் மற்றும் அவனுடைய மேன்மை ஆகியவற்றிற்கு அடிப்படையாய் இருக்கிறது. எனவே எண்ணங்களின் பல்வேறு நிலைகள் மனிதனுடைய வாழ்க்கையை வழி நடத்திச் செல்லுகின்றன. எண்ணங்களின் பல்வேறு நிலைகள் என்னென்ன? அவைகள் எப்படி மனித வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கின்றன என்று இந்த பதிவில் விரிவாகப் பாப்போம்.

மனிதனுடைய எண்ணங்களின் நிலைகளை ஏழு வகையாகப் பிரிக்கலாம் என்று மன நல அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அவைகளை இவ்வாறு பிரிக்கின்றனர்.

  • அடிப்படை நிலை
  • உணர்ச்சிமிக்க நிலை
  • பகுத்தறிவு நிலை
  • சிந்தனை நிலை
  • தத்துவ நிலை
  • படைப்பாற்றல் நிலை
  • ஆன்மீக நிலை

அடிப்படை நிலை


அடிப்படை நிலையில் எண்ணங்கள் சிதறியவாறு இருக்கும் என்று சொல்லுகின்றனர். நம் மனதில் எந்த வித கட்டுபாடின்றி பல லட்சக்கணக்கான எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டே இருக்கின்றன. ஒருமுகப்படுத்தாத எண்ணங்கள் சிதறிக் கிடைகின்றன. அவைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி மறைந்துகொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் அவை நிலைத்து நிற்பதில்லை. இதற்கு உதாரணமாக நாம் பார்க்கும் காட்சிகளைச் சொல்லலாம். ரயிலில் பயணம் செய்யும்பொழுது நாம் ஜன்னல் வழியாக பார்க்கும் காட்சிகள். நாம் ரயிலுடன் வேகமாக கடந்துபோகும்போழுது கண்ணில் படும் காட்சிகளும் மாறி மாறி வித்தியாசமான காட்சிகளைத்தான் பாப்போம். ஒரே ஒரு காட்சியில் மட்டும் நாம் ஸ்திரமாக நிலைத்து நிற்காமல் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் நம் எண்ணங்கள் சிதறுகின்றன என்பதை நன்கு அறியலாம்.

உணர்ச்சி நிலை


கோபம், பயம்,மகிழ்ச்சி,துக்கம் போன்ற உணர்ச்சி நிறைந்த எண்ணங்கள் அவைகளின் சரியான சூழ்நிலைகளை சந்திக்கும்பொழுது உண்டாகின்றன. நாம் எப்படி எந்த உணர்ச்சியுடன் பிறரை சந்திக்கிறோமோ அந்த உணர்ச்சிதான் வெளிப்படும். நாம் மகிழ்ச்சியாக உறவாடினால் மற்றவர்களும் நம்மிடையே மகிழ்ச்சியாக உரையாடுவார்கள். மாறாக கோபத்துடன் எதிர்கொண்டால் உறவிலும் கோப உணர்ச்சிதான் மிஞ்சும். பிறர் நம்மிடையே காட்டுகிற துன்பம் நம்மிடையே சோக உணர்ச்சியாக வெளிப்படும். இதுவே உணர்ச்சி நிலை என்று சொல்கிறோம்.

பகுத்தறிவு நிலை


ஏன்? எப்படி ? எதற்கு? போன்ற கேள்விகள் எழுப்பும் நிலை -பகுத்தறிவு நிலையாகும். சந்தேகங்களுக்கு விடை தேடும் அறிவு நிலைதான் பகுத்தறிவு நிலை. ஆராய்ச்சியில் இது பெரும் பங்கு வகிக்கிறது. கேள்வி எழுப்புவது மூலம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு தெளிவை கண்டுபிடிக்க மோலுதல் பகுத்தறிவு நிலை.

சிந்தனை நிலை

நாம் ஒரு செயலை செய்வதற்குமுன் சிந்திக்கிறோம்- ஒருமுறை அல்ல பல முறை சிந்திக்கிறோம். எப்படி ஒரு லட்சியத்தை அடைவது? என்ன வழிகள் இருக்கின்றன ? எப்படி செயலாற்றுவது போன்ற அலசல்களை சிந்தனை நிலை என்று சொல்கிறோம். உதாரணமாக நாம் ஒரு நடிகனாக வேண்டும் என்று நினைத்தால் அதற்கான நடிப்புத்திறனை வளர்த்துக்கொள்ள நாம் என்னென்ன பயிற்சிமுறைகளை கையாளவேண்டும், எப்படி உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும் மற்றும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான எல்லா குனாதிசையங்களையும் சிந்தனை நிலை மூலம் திறமைகளை வளர்த்துகொல்லுதல்.

தத்துவ நிலை


மனிதன் வாழ்வின் தத்துவங்களை தெரிந்துகொள்ளவும், அதன் படி நடக்கவும் இந்த தத்துவ நிலை உதவுகிறது. வாழ்க்கை என்பது என்ன, இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைகளின் விளக்கங்களை எடுத்து சொல்வது தத்துவ நிலை. வாழ்க்கைத் தத்துவங்களை முறையாகத் தெரிந்துகொண்டு அதன்படி நடக்க சிலர் விரும்புவர். அஹ்த்தகைய தத்துவ கருத்துகள் நம்முடைய இன்றைய சமூகத்திற்கு எவ்வாறு இணைத்து வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவது என்பனபோன்ற விஷயங்களை விளக்குவது தத்துவ நிலை.

படைப்பாற்றல் நிலை


ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆற்றலை வெளிப்படுத்துவது படைப்பாற்றல் நிலையாகும். இயல், இசை, நாடகம் போன்ற கலைகள், கதை, கட்டுரை மற்றும் கவிதைகளை எழுதுதல், ஓவியம், சிற்பம் மற்றும் விஞ்ஞானக் கலைகள் ஆகியவற்றில் ஈடுபடுவது படைப்பாற்றல் நிலை என்று சொல்கிறோம். மக்களுக்குப் பயன்படக்கூடிய அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இந்த படைப்பாற்றல் நிலையில் அடங்கும்.

ஆன்மீக நிலை

பக்தி, தெய்வ வழிபாடு மற்றும் தியானம் ஆகியவைகள் ஆன்மீக நிலைகள் ஆகும். இறைவனிடம் பக்தி செலுத்துதல், இறை விழாக்கள் நடத்துவது, புண்ணிய யாத்திரை செல்வது என்பனபோன்ற பக்தி மார்கத்தை பின்பற்றுவது எல்லாம் ஆன்மீக நிலையைச் சேரும்.

முடிவுரை 

இங்கு விவரிகபட்ட ஏழு நிலைகளும் மனித வாழ்வில் ஒன்றிணைந்து செயல் படுகின்றன. ஒவ்வொரு நிலைகளும் மனித மேம்பாட்டுக்காகவும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன. எண்ணமே வாழ்வு என்பதில் இந்த ஏழு நிலைகளையும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை இங்கு சொல்லப்பட்டுள்ள கருத்துகள் விவரிக்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக