வாழ்க்கை வாழ்வதற்கே!
![]() |
| மகிழ்ச்சியான குடும்பம் |
முன்னுரை
வாழ்க்கையை எவ்விதம் நாம் கையாளுகிறோமோ அவ்விதமே அதனுடைய பயனை அடைய முடியும்.
‘வாழ்க்கை என்பது வாழ்வதற்கே’ என்று பல அறிஞர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். நாம் இந்த பூமியில் பிறந்ததன் பணி நாம் வாழவேண்டும் என்பதற்காகவே ஆகும். வெறும் பாரங்களை சுமந்து நமது கடமை முடிந்துவிட்டது என்று சொல்வதற்கு அல்ல. உண்மையில் நாம் நம் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்தி வாழ்கிறோம் என்பதுதான். அன்றாட வேலை, கடமைகள் மற்றும் மற்ற செயல்களில் ஈடுபட்டு உண்மையான வாழ்க்கையின் அர்த்தத்தையே மறந்து விடுகிறோம். நாம் எப்படி வாழ்க்கையை கைகொள் கிறோ மோ அப்படித்தான் நம் வாழ்க்கை அமைகிறது.
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்
ஆமாம், நாம் ரயில் அல்லது பஸ் இவற்றில் பயணம் மேற்கொள்ளும்பொழுது வழி நெடுகிலும் உள்ள இயற்கையை நாம் ரசிக்கிறோமா? என்பது தான் கேள்வி. பலர் அப்படி செய்வதில்லை. இயற்கையையும் சுற்றுப்புறத்தையும் ரசிக்காமல் எதோ பயணம் செய்தோம், போனோம் என்று அங்கலாய்த்துகொள்ளுகிறார்கள். அதனால் பயண அனுபவம் வீண். அதே மாதிரிதான் வாழ்க்கையையும் சிலர் ரசிக்காமல் வாழ்ந்துவிட்டுபோகிறார்கள். அது வீணான வாழ்க்கைதான். எனவே வாழ்க்கை என்றால் அதனை முழுவதுமாக ரசிக்க வேண்டும், அனுபவிக்க வேண்டும்.
சின்ன சின்ன விஷயங்களில் சந்தோசம்
சிலர் இருக்கிறார்கள் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் ரசிப்பதில்லை. எதோ பெரிய சாதனை புரிந்தால் மட்டுமே மகிழ்ச்சி என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை, நாம் செய்த ஒரு சின்ன சாதனைகூட மகிழ்ச்சியைத் தரவல்லது. நாம் அதை முழு மனதுடன் ரசிக்கவேண்டும். அப்படி சின்ன விஷயங்களிலும் வெற்றிகளிலும் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்து வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக, காலையில் சூரியோதயம் கண்டு மகிழ்வது, வீட்டில் குழந்தைகளின் சிரிபொலியைக் கேட்டு அகமகிழ்வது, மழைபெய்யும்போழுது மழை ரசிப்பது போன்றன வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருபவை. அவற்றை கண்டு ரசிப்பதுதான் சின்ன சின்ன வாழ்க்கை மகிழ்ச்சிகள்.
நாம் வாழ்க்கையை எப்படி பார்க்கிறோம்?
இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு மிகவும் சுவாரஷ்யம் கொண்டது.
ஒரு கண்ணாடி டம்ப்ளரில் பாதி தண்ணீர் இருக்கறது என்று வைத்துகொள்வோம். அதை ஒரு சாரார் -டம்பளர் பாதி நிரம்பி இருக்கிறது என்று சொவர். ஆனால் அதே பாதி அளவு தண்ணீர் உள்ள தம்ப்ளரைப் பார்த்து பாதி காலியாக இருக்கிற டம்பளர் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் நம்முடைய பார்வையைப் பொறுத்து கருத்து தெரிவிக்கபடுகிறது. இதேபோல்தான் நாம் வாழ்க்கையையும் பார்க்கிறோம். வாழ்க்கை என்பது இன்ப துன்பங்கள் நிறைந்தது. வாழ்க்கையில் துன்பங்கள் மட்டும்தான் இருக்கின்றன என்று நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை ரசிக்கமுடியாமல் துன்பப்படுகின்றனர். அஹ்டற்குப் பதிலாக இன்பங்களும் இருக்கின்றன என்று இன்பத்தைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தால் வாழ்க்கை மிக அழகாக தோற்றமளிக்கும்.
எனவே வாழ்க்கையில் துன்பங்கள் மட்டும்தான் நிரம்பி இருக்கின்றன என்று நினைத்துகொண்டு மகிழ்ச்சியை ரசிக்க தவரவிட்டுவிடுகிறோம்.
வாழ்க்கையில் பொறுப்புகள்
வாழ்க்கையில் பொறுப்புகள் இருந்தால் இருந்தால், அவைகளுக்கு நன்றி சொல்லவேண்டும். பொறுப்புகளை ஆற்றுவதால் மன மகிழ்ச்சி ஏற்பட்டு வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்ல தூண்டுவதாகும். சிலர் நேரம் இல்லை , மகிழ்ச்சி காட்ட முடியவில்லை என்று நொந்து போகின்றனர். போருப்பகை நிறைவேற்றுவதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
துன்பமே வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை
கஷ்டங்களை பார்த்து பயந்து ஓடக்கூடாது
கஷ்டங்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை. அஹ்டுபோலவே தான் தோல்வியும். தோல்வியும் கஷடங்களும் தான் நம் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுபவை. தொல்வியிளிரிந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். எனவே வாழ்க்கை வாழ இவை இரண்டும் நல்ல துணைகள்.
உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன் எப்படி மின் விளக்கைக் கண்டுபிடித்தார் தெரியுமா? அவர் ஆயிரம் முறை தோற்றபின் தான் சரியாக எரியும் மின் விளக்கைக் கண்டுபிடித்தார். அவர் சொல்கிறார் “ நான் ஆயிரம் முறை தோற்றதால், அந்த ஆயிரம் முறைகளில் விளக்கை எரிய வைக்க முடியாது என்று கண்டுபிடித்தேன், ஆயிரத்துஒன்றாவது முறையில் தான் நான் சரியான முறையைக் கண்டுபிடித்தேன்” என்று. அதுபோல் தான் வாழ்க்கையும்.
பிறர் வாழ்க்கையுடன் ஒப்பிடுதல்
சிலரது பழக்கம், தங்கள் வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது. “அவர்களுக்கு என்ன சொந்த வீடு உள்ளது, கார் வைத்திருக்கிறார்கள், பிள்ளைகள் வெளி நாட்டில் வேலை பார்த்து நிறைய சம்பாதிக் கிறார்கள், நமக்கு அப்படி இல்லையே” என்று தன வாழ்க்கையை பிறர் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது. இதனால் மனத்தில் ஏக்கம், பொறாமை போன்ற குணங்கள் ஏற்பட்டு வாழ்க்கையை மகிழ்ச்சி இல்லாமல் ஆக்கிக் கொள்வது.
வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன ?
சமுதாயத்தில் தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்து, பிறரை எந்த சூழ்நிலையிலிருந்தும் காப்பாற்றுவது. பிறருக்கு பனி செய்வதையே கொள்கையாகக் கொண்டு “ஏன் கடன் பனி செய்து கிடப்பதே “ என்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துவது.
முடிவுரை
தோல்விகள் மூலம் பாடம் கற்றுக்கொண்டு பிறருக்கு முடிந்த உதவிகளைச் செய்து, முடிந்ததை பகிர்ந்துகொண்டு சிரித்து வாழ்வதே வாழ்க்கையாகும்!. உங்கள் மேலான கருத்துகளை இங்கே தெரிவிக்கவும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக