முன்னுரை
சுரைக்காய் சாப்பிடாத பக்தர்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு? ஏன் சாப்பிட மாட்டார்கள்? என்ன காரணம்? எது அவர்களை அப்படி தவிர்க்க சொன்னது? தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதா! மேற்கொண்டு படியுங்கள். உண்மை விளங்கும்.
சாஸ்தா சிலை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய ஊர் மருகால் தலை. அவ்வூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாஸ்தா கோயில் இருக்கிறது. சாஸ்தா சிலையை சில பக்தர்கள் எடுத்துகொண்டு போகும்பொழுது, அந்த பக்தர்களின் காலில் சுரைக்காய் கொடி இடறி பக்தர்கள் கீழே விழ சிலையும் சேர்ந்து கீழே வீழ்ந்து சேதமடைந்தது. சுரைக்காய் கொடி இடறிய காரணத்தால் சாஸ்தா பக்தர்கள் அனைவரும் சுரைக்காயை சாப்பிடுவதில்லை என்று கங்கணம் கட்டி கொண்டனர். அன்று முதல் அவர்கள் சுரைக்காயை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.
என்ன நடந்தது என்னவாயிற்று என்று மேற்கொண்டு படித்து தெரிந்துகொள்வோம்.
தமிழகத்தில் உள்ள பல கோயில்களைப் போலவே சாஸ்தா கோயிலும் பக்தர்களிடையே புகழ் பெற்ற கோயிலாகும். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியாகும் இது.
சிலை கண்டுபிடிப்பு
சும்மார் 800 ஆண்டு களுக்கு முன்பு, ஏழு வியாபாரிகள் கேரள மாநிலத்திளிரிந்து தமிழ் நாட்டிற்கு வியாபார நோக்கத்தோடு வந்தனர். அவைகள் காட்டுபகுதி வழியாக தமிழ் நாட்டை நோக்கி வரும் பொழுது பூலாத்தி செடிகளுக்கு நடுவில் சாஸ்தா சிலையை கண்டெடுத்தனர். சிலையைக் கண்டதும் வந்த வியாபாரத்தை விட்டுவிட்டு அந்த சிலையை தங்கள் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முடிவு செய்து, சிலையை சுமந்து கொண்டு கேரளம் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
சிலை சேதமடைதல்
அப்படி அவர்கள் சிலையை எடுத்துகொண்டு போகும்பொழுது வழியில் ஒரு இடத்தில் ஒய்வு எடுத்துகொண்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சற்று எதிர்பாராமல் அவர்களின் கால்கள் சுரைக்காய் கொடியில் அகப்பட்டு கால் இடறி கீழே விழுந்தனர். கூடவே சாஸ்தா சிலையும் கீழே விழுந்து சிலையின் கால் பகுதி உடைந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் சேதமடைந்த சிலையை எடுத்துகொண்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். அப்போது கடம்பாகுளம் என்ற ஊரில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சிலை மீண்டும் கீழே விழுந்து சிலை மார்பு பகுத்திக்கு கீழ் பகுதி உடைந்து இரண்டு துண்டாகியது.
மிகவும் வேதனை அடைந்த வியாபாரிகள், உடைந்த சிலைப் பகுதிகளை மருகால்தலை என்னும் இடத்தில் உள்ள மலைபகுதிகளில் வைத்துவிட்டு, கேரளம் நோக்கி ஊர் திரும்பினர்.
சிலை மீண்டும் கண்டெடுப்பு
இது நடந்து பல நாட்கள் ஆகின. அந்த இடம் மலைபகுதி யானதால் மேய்ச்சலுக்கு என்று இடையர்கள் பசுக்களை அழைத்து செல்வது வழக்கம். அப்படி செல்லுபோழுது ஒரு நாள் மேய்ச்சலுக்கு சென்ற சில பசுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தானாகவே பால் சொறிவதைப் பார்த்தனர். இதை ஊர் மக்களும் கவனித்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடைத்தை தோண்டி பார்த்த பொழுது பூலாத்தி செடிகளுக்கு நடுவே சாஸ்தா சிலையைக் கண்டனர்.
பூலாத்தி சாஸ்தா
பூலாத்தி செடிகளுக்கு நடுவே கண்டெடுக்கப்பட்டதால், அந்த சாஸ்தா “பூலாத்தி சாஸ்தா” என்று அழைக்கப்பட்டார். பின்னர் காலப்போக்கில் அந்த பெயர் மருவி “பூலுடையார் சாஸ்தா” என்று அழைக்கப்பட தொடங்கியது. இந்த ஐதீக சம்பவமே இக்கோயிலின் வரலாற்றுடன் பின்னி பிணைந்த முக்கிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
சுரைக்காய் சாப்பிடுவதில்லை
சாஸ்தா சிலை உடைந்து சேதமடைய சுரைக்காய் கொடியில் கால் இடறியதால்தான் என்ற ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக, அந்த கய்கரியான சுரைக்காயை பக்தர்கள் சாப்பிடுவதில்லை. இதையே வழி வழி பக்தர்களும் சாஸ்தா பகதர்கள் தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். குறிப்பாக மருகால்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் இந்த நம்பிக்கையை கடைப்பிடித்து தொடர்ந்து செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக