ஆப்பிள் வெளியிட்டது – iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max
முன்னுரை
ஆப்பிள் லேடஸ்டாக இரண்டு புதிய மாடல் ஐபோன்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த மிகவும் அட்வான்சுடு சிறப்பு அம்சங்களுடன் வெளியிட்டுள்ள இந்த போன்களைப் பற்றி இங்கு சற்று விரிவாகப் பார்ப்போம்.
போன்களின் அவசியம் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போன் இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் என்ற நிலையில் மக்கள் அதை பயன்படுத்திவருகின்றனர். அப்படிப்பட்ட அவசியமான போன்களில் எண்ணற்ற கம்பெனிகள் தங்கள் தங்கள் படைப்புகளை அவ்வப் பொழுது வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு வெளிஈட்டிலும் பல பல மாடல்களிலும் அட்வான்சுடு அம்சங்களுடன் போட்டி போட்டுகொண்டு வெளிஇட்டு மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
ஆப்பிள் புதிய மாடல் போன்கள் வெளியீடு
ஆப்பிள் வெளியிட்டுள்ள இரண்டு மாடல்கள் - ஒன்று iPhone 17 Pro மற்றது iPhone 17 Pro Max. அதன் சிறப்பு அம்சங்களை இங்கு பாப்போம்.
லேட்டஸ்ட் சிப்
இரண்டு வித போன்களும் சூப்பராக இயங்க அதில் மிகவும் சக்தி வாய்ந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது. A19 Pro சிப் என்று சொல்லப்படும் வேகமாக இயங்கக் கூடிய செயல்பாடுகொண்ட சிப் வகையைச்சார்ந்தது என்று ஆப்பிள் நிறுவனத்தினர் சொல்கிறார்கள். படு லேட்டஸ்டான வீடியோ எடிட்டிங் மற்றும் சிறந்த கேமிங் போன்றவற்றிற்கு தேவையான க்ராபிக்ஸ் இதில் உள்ளது. ஏ ஐ என்ற நவீன தொழில் நுட்பங்கள் மூலம் இயக்கமுடியும் என்றும் சொல்லப் படுகிறது.
அதிக பேட்டரி லைஃப்
அதி நவீன கூலிங் சிஸ்டம் கொண்ட சிப் பயன்படுத்துவதால், பாட்டரி நீண்ட நாட்கள் உழைக்கும் என்று சொல்லபடுகிறது. மற்ற போன்களை விட பாட்டரியின் ஆயுள் நீண்ட நாட்கள் வர இந்த கூலிங் சிஸ்டம் கொண்ட சிப் மிகவும் கூலாக வேலை செய்கிறது. நீண்ட கால பாட்டரி நீண்ட கால சேவை.
48 MP Fusion கேமரா
ஒய்டு, அல்ட்ரா ஒய்டு மற்றும் டெலிபோட்டோ என மூன்று விதமான லென்சுகள் இந்த காமிராவில் பயன்படுத்தி இருப்பது சிறப்பு அம்சம். இது தத்துரூபமான அசல் போட்டோகளை எடுப்பதற்கு உதவியாக இரு க்கிறது. எனவே நமக்கு கிடைப்பது மிகவும் தெளிவான உயிருள்ளது போன்ற போட்டோக்கள். டெலிபோட்டோ லென்ஸ் போருத்தப்ட்டுள்ளதால் மிக தூரத்தில் இருக்கும் படங்களைகூட 56% பெரிய சென்சார் மற்றும் **8× ஜூம் உதவியுடன் படங்களை எடுக்க முடியும்.
நாளைய போன் இன்றே
18 MP ரெசல்யூஷன் வரையிலான பிரன்ட் காமிரா கொண்டது மற்றும் சதுர வடிவ சென்சார் பயன்படுத்தி இருப்பதால் போனை சுத்தாமல் போர்ட்ரைட் மற்றும் லாண்ட்ஸ்கேப் முறைகளில் செல்பி எடுக்கலாம்.
சினிமா படம் எடுப்பவர்களுக்கு மிகவும் லேட்டஸ்ட் டெக்னிக்குகளை பயன்படுத்தபட்டிருபதால் பல காமிராக்களை ஒன்றாக இயக்கி சிங்க் செய்ய முடியும். பல கலர் காம்பினேஷன்களையும் பயன்படுத்த முடியும்.
செராமிக் ஷீல்ட்
காமிராவிற்கு முன் பின் இரண்டு பக்கமும் செராமிக் ஷீல்ட் பொருத்தப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகக் கருதபடுகிறது. இதனால் ஸ்க்ரீன் மீது ஸ்கிராட்ச் விழுவது வெகுவாக குறைக்கப் படுகின்றன. இது வரவேற்கத்தக்க புதிய அமசமாகப் பார்க்கப் படுகிறது.
3 நிறங்கள்
டீப் புளு , காஸ்மிக் ஆரஞ் மற்றும் சில்வர் ஆகிய மூன்று நிறங்களில் இந்த போன்கள் தயாரிக்கபடுகின்றன.
ஸ்டோரேஜ்
ஐபோன்கள் ஸ்டோரேஜ் iPhone 17 Pro** – 256 GB கொண்டது. 512 GB மற்றும் 2TB ஸ்டோரேஜ் அளவுகளிலும் கிடைகின்றன. 2TB ஸ்டோரேஜ் என்பது ஆப்பிளின் மிகப் பெரிய ஸ்டோரேஜ் போன் ஆகும்.
விற்பனை தொடக்கம் எப்போது ?
போன் வாங்க முன்பதிவு செய்ய ஆரம்பிக்கும் தேதி செப்டம்பர் 12 . செப்டம்பர் 19 இல் விற்பனை தொடங்குகிறது. மிக முக்கியமாக நம் நாட்டில் கிடைக்கும். மற்ற 63 நாடுகளில் இது விற்பனைக்கு வர இருக்கின்றன.
சலுகைகள்
உடனடியாக வாங்குபவர்களுக்கு என சிறப்பு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. விபரங்களுக்கு ஆப்பிள் நிறுவன நியூஸ் லெட்டரைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக